Tuesday 29 October 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள் ! ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதை .



புத்தாடை பூத்தது புது உலகம் பிறந்தது
புதுமை மனப் பூரிப்பூ எழிலாய் உள்ளப் பொழிவு!

எண்ணங்களில் வண்ண வண்ண பூக்களாய் 
வீதியெங்கும் ஒளி வெள்ள பேரழகு! 

வெடியோசை மின்னல் இடியாய் 
வண்ண வான வேடிக்கை! 

மத்தாப்பூ சிரிப்பாய் மனம் கொண்டாடும் 
மகத்தான பெருநாள்! 

உற்றார் உறவினரும் ஒருமித்த அன்பாய் 
தித்திக்கும் இனிப்போடும் திகட்டா களிப்போடும் 
திகட்டாத அன்போடும்! 

எல்லைகள் கடந்த இன்பப் பெருங்கடலாய் 
இல்லங்கள் தோரும் மற்றவர் மகிழ்ச்சியில் 
மனப் பெருமிதம் கொண்டு .

அன்பு ஊற்றாய் பெருகி உள்ளம்
கொள்ளை கொள்ளும் உண்ணத திருநாள்! 

இருண்ட அரக்கனை அழித்து 
மகாபாரதத்தின் சுதந்திர விடியலாய் 
ஒளிதீபம் ஏற்றிடும் மகாதினம்! 

ஏழைகள் நெஞ்சிலும் மகிழ்ச்சிப் பெருக்கோடு 
இன்முகச் சிரிப்பழகு காணும் இனிய திருவிழா! 

மலர்விழி பூத்த அரும்பு மழலைகளின் 
மனமெல்லாம் மகிழ்ச்சி மத்தாப்பாய் 
முத்தாய்ப்பாய் உள்ளம் மகிழும் ஒளிவிழா! 

வானம் விட்டு வான வில்லும் இறங்கி வந்ததோ
வாசல்தோரும் சிறுவர்களின் கரங்களிலே 
காட்சி தந்ததோ!!! 

மழலைகளின் சிரிப்பினிலே மயங்கிவிட்டதோ 
வானவில்லும் வானத்துக்கு வழி கேட்டு 
வீதியெல்லாம் சுற்றி வருகுதோ ?

ஏழுவண்ணம் வீதிகளில் ஊர்வலமாய் 
நடந்து செல்லும் பேரழகு காண்பீரோ......! 

இன்று வெண்ணிலவும் விடுமுறையில் 
பூமி வந்ததோ? நம் இல்லங்களில் 
நடமாடும் மங்கையரின்  முகத்தினிலே 
அமர்ந்துகொண்டதோ ?
ஆனந்தமாய் நாம் கொண்டாடும் 
தீபாவளி நன்னாளே.....!

Wednesday 23 October 2013

நீயே என் மருந்தகம் !

நீயே என் மருந்தகம்        
அன்பே என் உழைப்பின்
இடையே நான்
கழைப்படையும் போதெல்லாம்
உன் நினைவுகளை
அள்ளிப் பருகுகிறேன்
காலை முதல் உழைத்து
மாலை உன் முகம்
காணும் போது
உன் குளிர்ந்த பார்வை
என் உடல் ரணங்களுக்கு
மருந்திடுகிறது
மறு கணம் உன் அணைப்பில்
ரணமான வலியெல்லாம்
மாயமாய் மறைகிறது
அன்பே நீயே என் மருந்தகம்...

Tuesday 22 October 2013

அன்பு !

அன்பு என்ற ஒற்றை
வார்த்தையில்தான்
உலகத்தில் உள்ள
அத்தனை சுகங்களும்
அடங்கியிருக்கிறது...

அம்மா !

அம்மா என்ற
ஒற்றை வரியில்தான்
உலகத்தில் உள்ள
அத்தனை வார்த்தைகளும்
அடங்கியிருக்கிறது.

Friday 18 October 2013

உலக சாதனையில் நீங்களும் இடம்ப்பெற வேண்டுமா?





அழைக்கிறோம் கவிஞர்களை - இணைந்து
படைத்திடுவோம் உலகசாதனையை.

அன்புடன்,

கவி நாகா 

Saturday 5 October 2013

கதை சொல்லும் களத்துமேடு !

எட்டு வச்சி நான் வந்தேன்
எட்டு மாசம் உன்ன சுற்றி
கட்டெறும்பாஓடி வந்தேன் .
அச்சு வெல்ல பேச்சழகில்
கருவிழியால் காதல் சொன்ன
கட்டழகி முத்தம்மா
ஒருநாள் காணலேனா
 அடி மனசு வலிக்குமடி
ஆத்தா அப்பன்
தடைபோட அழுது கலங்கி
மனம் தவிச்சு இருப்பதேனோ ?
நாம் காதலிச்ச கதையெல்லாம்
களத்துமேடு சொல்லுமடி
எத்தனை நாள் காத்திருந்தேன்
ஏங்கி நானும் தவிச்சிருந்தேன்
நான் அள்ளி வச்ச ஆசையில
கொள்ளிவச்சி போறியேடி
இடி போலவார்த்தை சொல்லி
எம்மனசு களங்குதடி
செத்த நேரம் நில்லு புள்ள
சுத்தமான காதல் இது
சத்தியமா கைகூடும்
ஆத்தா கருமாரி
நம் காதலுக்கு துணையிருப்பாள்
கலங்காதே கண்மணியே

கைப்பிடிப்பேன் நான் உனையே......

Thursday 3 October 2013

மழழை மொழியில் தமிழை பதிவு செய்வோம்!


அழ வள்ளியப்பன் நிலவொளியில்
அல்லிமலர் மழழைகளாய்!
கல்வி என்ற சோலையிலே
பூத்திருக்கும் விடி வெள்ளி
மலர்க் குழந்தைகளே

உன் பூவிதழின்
வாசத்திலே பெருமிதமே!
புன்னகை பூப்பூக்கும் பேரழகே!
கார்முகிலாய்
கனிமொழி பொழியும்
காலம் தந்த சீதனமே!
அன்னை மொழியாம்
அமுத தமிழை
நாவினில் கொஞ்சிடு
தங்கமே
உன் பிள்ளைத் தமிழால்
அன்னைக்கும் சொல்லிக்கொடு
மம்மி இல்ல அம்மா என்று!
தனித் தமிழில் உரையாடு
தரணியெங்கும் தமிழின் புகழ்பாடு
தமிழ் எந்தன் உயிரென்று
தமிழாலே இசைபாடி
தலைநிமிர்ந்து நீ வாழு!
யாழ் மீட்டும் இசையாய்
செவ்வாய் முட்டும் தமிழால்
மழலை மொழித் தேன் சிந்து!
வான் போற்றும் வள்ளுவனாய்
தான் போற்றி வாழ்ந்திருப்பாய்.